கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட எரங்க குணசேகர உள்ளிட்ட மூவரை பிணையில் விடுவிக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவர்களை தலா 02 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 84 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் மூவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும் எஞ்சியவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.