Our Feeds


Tuesday, September 6, 2022

SHAHNI RAMEES

ஆப்கானில் ரஷ்ய தூதரகத்தில் தற்கொலை படை தாக்குதல்..!


=

ஆப்கானிஸ்தானில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் நடந்த

தற்கொலைப் படை தாக்குதலில் இரண்டு ஊழியர்கள் உயிரிழந்தனர். விசா பெறுவதற்காக காத்திருந்த ஆப்கானிஸ்தானியர் ஒருவரும் கொல்லப்பட்டார்.


தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பின் நிர்வாகம் அமைந்துள்ளது. தலைநகர் காபூலில் உள்ள ரஷ்ய துாதரகத்தில் விசா பெறுவதற்காக பலர் நேற்று காத்திருந்தனர்.


அப்போது, விசா கிடைத்துள்ளோரின் பெயர்களை, அங்கிருந்த ஊழியர் அழைத்துள்ளார். அந்த நேரத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் இரண்டு ஊழியர்கள் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானியர் ஒருவரும் உயிரிழந்தார். 10இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


இந்த சம்பவத்துக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்த முழு விசாரணைக்கு உத்தரவிடும்படி, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தலிபான் அரசை வலியுறுத்தியுள்ளார்.


இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதே நேரத்தில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »