Our Feeds


Wednesday, September 28, 2022

SHAHNI RAMEES

வீடுகளை டொலர்களுக்கு விற்பனை செய்யும் திட்டத்தில் முதலாவது வீடு விற்பனை செய்யப்பட்டது....

 

வியாத்புர வீடமைப்புத் திட்டத்தின் முதலாவது வீடு விற்பனை செய்யப்பட்டது

நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான வீடுகளை டொலர்களுக்கு விற்பனை செய்யும் அரசின் வேலைத் திட்டத்தின் கீழ் டுபாயில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் முதலாவது வீட்டைக் கொள்வனவு செய்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. வியாத்புர வீடமைப்புத் திட்டத்திலிருந்து இந்த வீடு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.



நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் நடுத்தர வருமானமுள்ளவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளே இவ்வாறு டொலர்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கையர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள தொழிலாளர்களுக்கு டொலர்களைச் செலுத்தி கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



அமெரிக்க டொலர் மூலம் பணம் செலுத்தி வீடுகளைக் கொள்வனவு செய்வோருக்கு 10% கழிவு வழங்கப்படவுள்ளது. 02 படுக்கையறைகளைக் கொண்ட வீட்டின் பெறுமதி 158 இலட்சம் ரூபாவாகும். இந்த வீட்டை 10% கழிவுடன் 142 இலட்சம் ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியும். வெளிநாடுகளில் தொழில்புரியும் பலர் இந்த வீடுகளைக் கொள்வனவு செய்ய விருப்பப்பட்டுள்ளனர்.



 இதன் அடிப்படையில் தான 10% விலைக் கழிவுடன் 142 இலட்சம் ரூபாவுக்கு டுபாயில் பணி புரிபவர் கொள்வனவு செய்துள்ளார்.



எதிர்வரும் டிசம்பர் மாதம் 275,000 அமெரிக்க டொலர்களைச் சம்பாதிப்பதே நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் வீடமைப்பு அமைச்சின் நோக்கமாகும்.


ஊடகப் பிரிவு

நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் வீடமைப்பு அமைச்சு

2022.09.28


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »