இன்று (23) முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை நாளொன்றுக்கு 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டை மேற்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி பகல் நேரத்தில் ஒரு மணி நேரமும் இரவில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மினவெட்டு அமுல்படுத்தப்படும்.
பழைய லக்க்ஷபான அனல்மின் நிலையத்தின் 1ஆம் கட்டம் இயங்காமை, மின் உற்பத்திக்கான எரிபொருள் பற்றாக்குறை மற்றும் திடீரென அதிகரித்த மின் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.