குருந்தூர்மலை தமிழ்களுடையது அல்ல, அது சிங்களவர்களுடையது என குறிப்பிட்டு முல்லைத்தீவு- குருந்தூர்மலை தேசிய மரபுரிமை சின்னங்களை பாதுகாப்போம் என வலியுறுத்தி பௌத்த தேரர்கள், அரசியல்வாதிகள் உட்பட சிவில் அமைப்பினர் இன்று (26) சுதந்திர சதுக்கத்திலிருந்து பேரணியை ஆரம்பித்து புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் கலை கலாசார அலுவல்கள் அமைச்சு வரை சென்று,புத்தசாசன அமைச்சின் செயலாளரிடம் மஹஜர் ஒன்றை கையளித்தனர்.
ஆரசியல் அரசியல் நோக்கங்களுக்கு அப்பாற்பட்ட வகையில் சிறந்த நோக்கத்துடன் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நாடாளுமன்றத்தினால் இயற்றப்பட்ட தொல்லியல் சட்டங்களை முறையாக நிறைவேற்றியிருந்தால் இன்று இந்நிலைமை ஏற்பாட்டிருக்காது. நாட்டை முழுமையாக வங்குரோத்து செய்து விட்டு தற்போது சிங்களவர்களை ஒன்றிணைப்பதாக கூறிக்கொண்டு இங்கு வந்துள்ளீர்கள் என சுதந்திர சதுக்கத்துக்கு வருகை தந்த முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு அங்கு கூடியிருந்தவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தேசிய மரபுரிமைகளை பாதுகாத்தல் அவசியமாகும். குருந்தூர்மலை பௌத்தர்களுக்கு சொந்தமானது,புனரமைப்புக்கு எத்தரப்பினரும் இடையூறு விளைவிக்க கூடாது என பேரணியில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர்.