Our Feeds


Wednesday, September 28, 2022

SHAHNI RAMEES

நாவலப்பிட்டியில் நீர் விநியோகத் தடை..!



தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நாவலப்பிட்டி

நீர் வழங்கல் திட்டத்தின் பிரதான நீர்க்குழாயில் திருத்த வேலைகள் காரணமாக 29ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப. 8 மணி முதல் மறுநாள் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப. 8 மணி வரையிலான 24 மணிநேர நீர் விநியோகத்தடை பின்வரும் பகுதிகளில் அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.


நாவலப்பிட்டி நகர எல்லை, பெளவாகம, மல்லந்த, இம்புல்பிட்டிய, ஹதுன்கலவத்த, தொலஸ்பாகே வீதி, பெனித்திமுல்ல உட்பட நாவலப்பிட்டி நீர் வழங்கல் திட்டத்தின் ஊடாக நீர் விநியோகிக்கப்படும் சகல பகுதிகள் நீர் விநியோத் தடையினால் பாதிக்கப்படும். இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கவலை தெரிவிப்பதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.


இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »