உயர்தரப் பரீட்சையை பிற்போடுமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் தடவையாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களினால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் டிசெம்பர் மாதம் உயர்தரப் பரீட்சையை நடாத்துவதன் மூலம் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
உயர்தரப் பரீட்சை நிறைவுப் பெற்று, பெறுபேறுகள் வெளியாவதற்கு 6 மாதங்கள் ஆன நிலையில், 03 மாதங்களில் தமது பிள்ளைகள் மீண்டும் பரீட்சைக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே உயர்தரப் பரீட்சையை 02 அல்லது 3 மாதங்களுக்கு பிற்போடுமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.