Our Feeds


Wednesday, September 7, 2022

SHAHNI RAMEES

மசகு எண்ணெய்யுடன் இலங்கை கடற்பரப்பில் 8 நாட்களாக காத்திருக்கும் கப்பல் தொடர்பான அதிர்ச்சி செய்தி..!

 

சுமார் ஒரு இலட்சம் மெற்றிக் தொன் மசகு எண்ணெய்யுடன் கப்பலொன்று இலங்கை கடற்பரப்பில் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

யூரல் நிறுவனத்துக்குச் சொந்தமான குறித்த மசகு எண்ணெய் கப்பலுக்கு பணம் செலுத்த முடியாத நிலையில் 8 நாட்களாக குறித்த கப்பல் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

எண்ணெய் நிறுவன வட்டாரங்களின்படி, தாமதக் கட்டணமாக ஒரு நாளைக்கு 75,000 அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.


கோரல் எனர்ஜி நிறுவனத்தினால் இலங்கைக்கு கொண்டு வரப்படவிருந்த 128,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெய்க்கு பதிலாக இந்த கப்பல் வந்துள்ளது.

இந்த யூரல் கப்பலின் மசகு எண்ணெய் சுத்திகரிப்பு பணியின் போது 52 சதவீதம் கறுப்பு எண்ணெய், 21 சதவீதம் டீசல் மற்றும் 12 சதவீதம் பெட்ரோல் பெறப்படும் என்று அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த மசகு எண்ணெயின் அடர்த்தி அதிகரிப்பால், சுத்திகரிப்பு நிலையத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »