சிறுநீரக நோய் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக நடமாடும் ஆய்வுகூடங்களுடன் கூடிய 8 வாகனங்கள் நேற்று (26) முதல் இயங்க ஆரம்பித்துள்ளன.
இந்த வாகனங்கள் சீனாவினால் வழங்கப்பட்டுள்ளதுடன் அவற்றின் பெறுமதி சுமார் 660 மில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.
அநுராதபுரம், பொலன்னறுவை, வவுனியா, திருகோணமலை, அம்பாறை, குருநாகல், மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களில் நடமாடும் ஆய்வுகூடங்களுடன் கூடிய வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
சிறுநீரக நோய் பரவுவதை தடுக்கும் நோக்கில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான திட்டத்தின் கீழ் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நடமாடும் ஆய்வுகூட வாகனங்களில் சீனாவினால் பயிற்சியளிக்கப்பட்ட இலங்கை சுகாதார ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.