மருதானை டீன்ஸ் வீதியில் இன்று சோசலிச இளைஞர்
சங்கம் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் போது 2 பௌத்த பிக்குகள் மற்றும் 4 பெண்கள் உட்பட 84 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதேவேளை, இந்த ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.
லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் இருந்து டீன்ஸ் வீதியூடாக மருதானை நோக்கிச் சென்ற ஆர்ப்பாட்ட பேரணியை தடுத்து நிறுத்துவதற்காக சுகாதார அமைச்சுக்கு முன்பாக பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.