Our Feeds


Tuesday, September 20, 2022

SHAHNI RAMEES

8 மாதங்களில் 19 முச்சக்கரவண்டிகள் மாத்திரமே புதிதாக பதிவு..!

 

இந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் புதிதாக 19 முச்சக்கர வண்டிகள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மேற்படி எட்டு மாத காலப்பகுதியில் ஏனைய வகைகளில் சுமார் 15,000 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

கடந்த 2021ஆம் ஆண்டில் 2,093 முச்சக்கர வண்டிகளும், 2020ஆம் ஆண்டில் 7,150 முச்சக்கர வண்டிகளும், 2019ஆம் ஆண்டில் 15,490 முச்சக்கர வண்டிகளும், 2018ஆம் ஆண்டில் 20,063 முச்சக்கர வண்டிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »