நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு ஸ்ரீ லங்கன்
எயார் லைன்ஸ் பாரிய பங்கை கொண்டிருக்கின்றது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மைத்துனர் ஸ்ரீ லங்கன் எயார் லைன்சில் பணிப்பாளர் இருந்த போது 50 இலட்சம் வேதனம் வழங்கப்பட்டது. இதற்கு பின்னர் வந்த ஒருவருக்கு 100 இலட்சம் ரூபா வழங்கப்பட்டது என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இதனையடுத்து இளைப்பாரிய இராணுவ அதிகாரி ஒருவர் செயற்பாட்டு பணிப்பாளராக நியமிக்கப்பட்டு அவருக்கு 30 இலட்சம் ரூபா கொடுப்பனவாக செலுத்தப்பட்டது.
நாமல் ராஜபக்சவின் காரியாலயத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் ஸ்ரீ லங்கன் எயார் லைன்சில் பணிப்பெண்ணாகவும், பணியாற்றி வருமானங்களை திரட்டி வந்தார்.
அதேநேரம், கடந்த 2010 ஆம் ஆண்டளவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஸ்ரீ லங்கன் எயார்லைன்சில் மலசலகூடம் ஒன்றை நிர்மாணிக்க 600 கோடி ரூபா ஒதுக்கப்பட்டது.
எனினும் அது நல்லாட்சி அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டது. 600 கோடி ரூபா செலவில் ஒரு மலசலகூடம் நிர்மாணிக்கப்படுமாக இருந்தால் அதில் தங்கத்தினாலான உதிரிப்பாகங்களே பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியிருந்தார்.