Our Feeds


Wednesday, September 7, 2022

SHAHNI RAMEES

6 பில். டொலர் எரிபொருள் வழங்க சவூதி இணக்கம்?


 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான எரிபொருளை ஐந்து வருட காலத்துக்கு கடன் அடிப்படையில் தொடர்ச்சியாக வழங்குவதற்கு சவூதி அரேபிய அரசாங்கம், இணக்கம் தெரிவித்துள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட பிரதிநிதியாக சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்திருந்த சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட், அந்நாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தார்.


விவசாய உரங்களை உற்பத்தி செய்தல், பெட்ரோலிய சேமிப்பு வசதிகளை நிர்மாணித்தல், எரிபொருள் விநியோக நிலையங்களை நிறுவுதல், எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்களை நவீனமயமாக்குதல் மற்றும் விரிவுபடுத்துதல், கனிமங்களை அகழ்வதற்கான வாய்ப்புகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்குவித்தல் போன்றவற்றுக்கு இலங்கையில் சவூதியின் முதலீடுகளைப் பெறுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளன.



இதன்போது, ஐந்தாண்டு கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு எரிபொருளை வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகவும் இதற்கான ஆரம்ப இணக்கப்பாட்டை சவூதி வெளிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஓகஸ்ட் 28ஆம் திகதி முதல் செப்டெம்பர் 1ஆம் திகதி வரை சவூதிக்கான உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த அமைச்சர் நஸீர், ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு இவ்விடயம் குறித்து விளக்கமளித்ததாக அறியமுடிகிறது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »