கொழும்பு கிராண்ட்பாஸ், பாலத்துறை கஜிமாவத்த பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 80 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், தீயினால் உயிர்ச் சேதமோ, காயமோ ஏற்படவில்லை எனவும் தீயினால் 80 குடும்பங்களைச் சேர்ந்த 300 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் தற்போது களனி விஹாரை மற்றும் சனசமூக மண்டபத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், தீப்பரவலுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேனை, இந்தச் சம்பவத்தினால் 54 மாணவர்களின் பாடப்புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.