திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸில் பயணித்த மீன் வர்த்தகர் ஒருவரிடமிருந்த 5 இலட்சம் ரூபா பணத்தை திருடியதாக கூறப்படும் இரு பெண்களை கைது செய்துள்ளதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட 33-18 வயதுடைய இரு பெண்களும்பெண் வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தtர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர்கள் இருவரும் மீன் வர்த்தகர் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகாமையில் இருந்த ஆசனத்தில் பயணித்தவர்கள் என்றும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
குறித்த மீன் வர்த்ததகர் குருணாகல் பகுதியில் பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த போது தனது பணத்தை யாரோ திருடிச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குருணாகல் பகுதியில் நின்றிருந்த பொலிஸாரிடம் இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டதனையடுத்து, சந்தேகமடைந்த பொலிஸார் 2 பெண்களையும் சோதனை செய்தபோது,அவர்களிடம் பணம் இருப்பது தெரிய வந்தது.