யுக்ரைனிடமிருந்து கைப்பற்றப்பட்ட 4 பிராந்தியங்கள, ரஷ்யாவுடன் நாளை வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக இணைக்கப்படவுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இது தொடர்பான கையெழுத்திடும் வைபவம் ரஷ்யாவின் கிரம்ளின் நகரில், வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் பேச்சாளர் திமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
யுக்ரைனின் லுகான்ஸ்க், டோனெட்ஸ்க், கேசர்சன், ஸபோரிட்ஸ்ஸியா ஆகிய பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்படவுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இப்பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பது தொடர்பாக இப்பிராந்தியங்களிலுள்ள மக்களிடையே சர்வஜன வாக்கெடுப்பை ரஷ்யா நடத்தியது.
இதன்போது, இப்பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதற்கு ஆதரவாக மேற்படி மக்கள் வாக்களித்துள்னர் என ரஷ்யா அறிவித்துள்ளது.
எனினும், இத்தேர்தலை யுக்ரைனும் மேற்குலக நாடுகளும் நிராகரித்துள்ளன.