கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 40 மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜே.விஜேசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்நிலைமை காரணமாக வெளிநாட்டு தூதுவர்களிடமிருந்து மருந்து வகைககளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கையிருப்பிலுள்ள மருந்துகளைக் கொண்டு வைத்தியசாலை நடவடிக்கைகளை முடிந்தளவு முகாமைத்துவம் செய்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பல நாட்களாகவே, அதிகளவான மருந்து வகைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களையும் வெளிநாட்டு தூதுவர்களின் உதவியினால் பெறப்பட்டிருந்ததாகவும், தொடர்ந்தும் அவர்களின் உதவியை பெற்றுக்கொள்ளவும் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடு முழுவதிலும் உள்ள சிறுவர் மற்றும் மகப்பேற்று வைத்தியசாலைகளில் திரிபோஷாவுக்கான தட்டுப்பாட்டு நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.