(எம்.எப்.எம்.பஸீர்)
23 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பொலிஸ் பொறுப்பதிகாரி கடமையிலிருந்து நீக்கப்பட்டு வேறு சாதாரண பொலிஸ் கடமைகள் தொடர்பில் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார்.
பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் இந்த 23 பொலிஸ் பொறுப்பதிகாரிகளும், கடந்த மே மாதம் 9 ஆம் திகதியும் அதனை அன்மித்தும் நாட்டில் பதிவான வன்முறைகலின்போது, அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவங்களை தடுக்கத் தவறியமையை மையப்படுத்தி இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.
தமது கடமைகளை சரிவர செய்யாமை தொடர்பில் இவர்கள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்ப்ட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி உயிலன்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி எச்.ஜே.முத்தட்டுதென்ன களனி வலயத்தின் சாதாரண கடமைகளுக்காக இடமாற்றப்பட்டுள்ளார். அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர்.எல்.எல். விஜேரத்ன குளியாபிட்டிய வலயத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மிஹிந்தலை பொலிஸ் பொறுப்பதிகாரி கே.டி.பி. சிறிவர்தன பாணந்துறை வலயத்துக்கும், மின்னேரிய பொலிஸ் பொறுப்பதிகாரி ஆர்.எச்.பி. ரத்நாயக்க சீத்தாவக்கபுர வலயத்துக்கும், வாரியபொல பொலிஸ் பொறுப்பதிகாரி டி.பீ. தல்வத்த கேகாலை வலயத்துக்கும் சாதாரண கடமைகள் தொடர்பில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனைவிட குளியாபிட்டிய தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எச். ஜயவீர நிக்கவரட்டிய வலயத்துக்கும், தங்கொட்டுவ பொலிஸ் பொறுப்பதிகாரி வசந்த குமார நிக்கவரட்டிய வலயத்துக்கும், ஹெட்டிபொல பொலிஸ் பொறுய்ப்பதிகாரி ஆர்.எச். வசந்த குமார சிலாபம் வலயத்துக்கும் சாதாரண கடமைகள் நிமித்தம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனைவிட குருணாகல் தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி கே.எஸ். அதிகாரி கேகாலை வலயத்துக்கும், நாரம்மலை பொலிஸ் பொறுப்பதிகாரி கே.பி. ரஞ்சித் நீர்கொழும்பு வலயத்துக்கும் சாதாரண கடமைகள் நிமித்தம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தொம்பே பொலிஸ் பொறுப்பதிகாரி ஆர்.பீ.ஏ. பிரியந்த களனி வலயத்துக்கும், ஹோமாகம தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டீ.எச். விக்ரமரத்ன பாணந்துறை வலயத்துக்கும், கெஸ்பேவ பொலிஸ் பொறுப்பதிகாரி எச்.ஜீ. அபேரத்ன கொழும்பு தெற்கு வலயத்துக்கும், கொஹுவலை பொலிஸ் பொறுப்பதிகாரி எச். ஹரிசன் பாணந்துறை பொலிஸ் வலயத்துக்கும், கிரிபத்கொட பொலிஸ் பொறுப்பதிகாரி எல்.பிரதீப் குமார சீத்தாவக்க வலயத்துக்கும் இடமாற்றப்பட்டுள்ளனர்.
திஸ்ஸமஹராம பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.டி. காரியவசம் களுத்துறை வலயத்துக்கும், பிட்டிகல பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.எச். கருணாரத்ன கல்கிசை வலயத்துக்கும், கேகாலை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜீ.என். குலதுங்க கம்பஹா வலயத்துக்கும் கொலன்ன பொலிஸ் பொறுப்பதிகாரி ஜகத் குமார மாத்தறை வலயத்துக்கும் சாதாரண கடமைகள் நிமித்தம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்