கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நீரிழிவு, கொலஸ்ட்ரோல் உள்ளிட்ட சுமார் 20 உயிர் இரசாயன பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு வைத்திய ஆய்வக விஞ்ஞான தொழிற்சங்கவியலாளர்களின் நிபுணத்துவ சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
அந்த பரிசோதனைகள் முன்னெடுப்பதற்கு தேவையான இரசாயன பொருட்கள் மற்றும் உபகரணங்களை பெற்றுக்கொள்ள வைத்தியசாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.