மதுபோதையில் தனது தாயுடன் தகராறு செய்தார் எனக் கூறப்படும் தனது தந்தையை மகன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (08) இரவு ஊருபொக்க, பரணவத்தை, உலு ஒலுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் அதே பகுதியில் வசிக்கும் 39 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர், மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறு செய்து அவரை தாக்கியபோது மகன் இறந்தவரை கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலைச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் 17 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.