15 வயதான மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்தார் எனக்கூறப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நபர் மரபணு பரிசோதனையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று ( 28) எஹலியகொட பொலிஸாரால் பலீகல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
2009ஆம் ஆண்டு எஹலியகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொஸ்கஹமுகலன பிரதேசத்தில் பாடசாலைச் சீருடையுடன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் அவிசாவளை மேல் நீதிமன்றில் தற்போது வழக்கு நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எஹலியகொட பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவர்.
சந்தேக நபர் இன்று (29) அவிசாவளை மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.