Our Feeds


Thursday, September 29, 2022

SHAHNI RAMEES

15 வயது மாணவி கொலை – தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது..!



15 வயதுடைய பாடசாலை மாணவி பாலியல்

துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் டிஎன்ஏ பரிசோதனையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த நபர் நேற்று (28) எஹலியகொட பொலிஸாரால் பலீகல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


2009 ஆம் ஆண்டு எஹலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொஸ்கஹமுகலன பிரதேசத்தில் பாடசாலைச் சீருடையுடன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவர் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எஹலியகொட பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.


சந்தேக நபர் இன்று (29) அவிஸ்ஸாவல மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »