Our Feeds


Friday, September 2, 2022

Anonymous

111 கோடி பெறுமதியான போதைப்பொருள்; கொள்வனவு செய்த கார் மீட்பு



மாத்தறை, வெலிகம பிரதேசத்தில் 111 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளை கடத்தியதற்காக பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட காருக்கு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.


2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி பொலிஸ் விசேட அதிரடிப்படை கொனஹேன முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் 111 கிலோ போதைப்பொருளுடன் இந்த பாரிய போதைப்பொருள் சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சுற்றிவளைப்பின் பின்னர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் போதைப்பொருளை கடத்திய அங்கொட கொட்டிகாவத்தையில் வசிக்கும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நீண்ட விசாரணையில் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் குறித்த நபர் இந்த காரை வாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

2020 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் திகதி கொழும்பு 6, கிருலப்பனை ஹைலெவல் வீதிப் பகுதியில் உள்ள கார் விற்பனை நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்காரரால் 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் திகதி ரூபா பெறுமதியாக இந்த கார் கொள்வனவு செய்யப்பட்டதாக நீண்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »