10,000 ஏக்கர் கஞ்சா தோட்டத்தை சுகாதார அமைச்சு அமைச்சரவைக்கு முன்மொழியவுள்ளதாக சண்டே டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள இத்தோட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் கஞ்சாவை ஏற்றுமதி செய்வதே இதன் நோக்கமாகும்.
இதற்கான பிரேரணையை சுகாதார அமைச்சின் ஊடாக உள்ளுர் மருத்துவ இராஜாங்க அமைச்சர் ஜெயக்கொடி முன்வைக்க உள்ளார்.
மேற்கத்திய நாடுகளில் கஞ்சாவிற்கு அதிக தேவை இருப்பதாகவும், நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடிக்கு இதன் மூலம் வெளிநாட்டு வருமானத்தை ஈட்ட முடியும் எனவும் உள்ளுர் மருத்துவ இராஜாங்க அமைச்சர் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்