கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள நான்கு எரிபொருள் கப்பல்களுக்கான பணத்தை உடனடியாக செலுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக வலுச்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இரண்டு டீசல் கப்பல்கள், ஒரு பெற்றோல் கப்பல் மற்றும் ஒரு மசகு எண்ணெய் கப்பல் ஆகியனவே துறைமுத்தில் நங்கூரமிட்டுள்ளன.
இதேவேளை, கொழும்பு துறைமுகத்தில் பல வாரங்களாக நங்கூரமிடப்பட்டிருந்த 3 எரிபொருள் கப்பல்களுக்கு அண்மையில் பணம் செலுத்தப்பட்டதை அடுத்து, எரிபொருள் இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.