பெற்றோல் , டீசல் மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட அனைத்து வகையான எரிபொருட்களும் தட்டுப்பாடு இன்றி கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால், அந்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூட்டுதாபனம் குறிப்பிடுகின்றது.
அதேபோன்று, இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் கொலன்னாவ மற்றும் முத்துராஜவலை களஞ்சியசாலைகளில் உள்ளதாகவும் கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது.
தட்டுபாடின்றி எரிபொருள் விநியோகிக்க முடியும் என்பதனால், எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது