Our Feeds


Thursday, August 25, 2022

Anonymous

பாரிய அரிசி மோசடி: அநுராதபுரம் சதொச களஞ்சியசாலையின் முகாமையாளர் வெளிநாடு செல்ல தடை!

 



அநுராதபுரம் சதொச களஞ்சியசாலையின் முகாமையாளர் வெளிநாடு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.


அநுராதபுரம் பிரதான நீதிவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி தநாலக ஜயசூரிய ஆகியோர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.

பெருந்தொகையான நாட்டு மற்றும் சம்பா அரிசியை மோசடி செய்ததாக அநுராதபுரம் சதொச களஞ்சியசாலையின் முகாமையாளர் மீது குற்றஞ் சுமத்தப்பட்டுள்ள நிலையிலேயே அவர் வெளிநாடு செல்வதற்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த பாரிய அரிசி மோசடி தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் 11ஆம் இலக்க வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் நிரோஷனி ஹேவா பத்திரன ஆகியோருக்கு பிரதம நீதிவான் மேலும் உத்தரவிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »