தனியார் பஸ்களுக்கான எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளமையினால், தனியார் பஸ் சேவைகள் 25 வீதத்தால் குறைவடையும் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தூர பிரதேசங்களுக்கான பஸ் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், குறுகிய தூர பஸ் சேவைகள் 25 வீதத்தால் குறைவடையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இன்று மற்றும் நாளைய தினத்தில் பஸ்களுக்கான எரிபொருள் விநியோகம் முறையாக இடம்பெறாத பட்சத்தில், திங்கட்கிழமை முதல் முழுமையாக பஸ் போக்குவரத்து பாதிக்கும் நிலைமை காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.