ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஐவர், அரசாங்கத்துடன் இணையவுள்ளனர் என்று சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நல்லாட்சியின்போது அமைச்சு பதவிகளை வகித்த ஐவரே, இவ்வாறு அரசுக்கு ஆதரவு வழங்கி, பதவிகளை பெறவுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த வேண்டுகோளுக்கமையவே இவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியில் நீண்டகாலம் இவர்கள் முக்கிய பதவிகளையும் வகித்துள்ளனர்.