முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி இலங்கைக்கு வரவுள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் மூலம் அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் சி.என்.என் சேவைக்கு தெரிவித்துள்ளார்.
கடந்த ஜுலை மாதம் 13ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி, மாலைதீவுக்கும், அங்கிருந்து சிங்கப்பூருக்கும், பின்னர் தாய்லாந்துக்கும் பயணமானார்.
முன்னாள் ஜனாதிபதி இலங்கை வருவதற்கு எந்தத் தடையும் இல்லை. இலங்கை பிரஜை என்ற வகையில் அவர் விரும்பியவாறு இலங்கை வர முடியும் எனவும் வெளிவிவகார அமைச்சர் சி.என்.என் சேவைக்கு மேலும் தெரிவித்துள்ளார்.