Our Feeds


Saturday, August 27, 2022

SHAHNI RAMEES

சஜித் பிரேமதாசவின் சகோதரி துலாஞ்சலி நாட்டிலிருந்து வெளியேறியதாக தகவல்..!

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமராக பதவி வகித்தபோது கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது வீட்டை எரித்து நாசம் செய்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அண்மையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரி துலாஞ்சலி ஜயக்கொடி நேற்று (26) நாட்டை விட்டு வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர் தனது இரண்டு குழந்தைகளான சஞ்சய் ஜயகொடி மற்றும் அமாயா ஜயகொடி ஆகியோருடன் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL 505 ஊடாக நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

கொள்ளுப்பிட்டியில் உள்ள ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீடு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த 20 ஆம் திகதி சனிக்கிழமை துலஞ்சலி ஜயகொடியிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

ரணில் விக்ரமசிங்கவின் கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் வீடு ஜூலை 9ஆம் திகதி வன்முறையாளர்களால் தீக்கிரையாக்கப்பட்டதுடன், பல பெறுமதியான புத்தகங்கள் மற்றும் ஏனைய சொத்துக்கள் அழிக்கப்பட்டன.

சம்பவத்தின் போது துலஞ்சலி ஜயகொடி இருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குற்றப் புலனாய்வு பிரிவினர் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »