பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவையை எயார் இந்தியா நிறுவனம் அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இதை தெரிவித்தார்.
மேலும், பலாலிக்கு வாரத்திற்கு இரண்டு விமானங்கள் என்ற வகையில் அடுத்த மாதம் முதல் விமான சேவையை ஆரம்பிக்க ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது.
இந்த விமானம் 75-90 இருக்கைகள் கொண்டதாக கூறப்படுகிறது, மேலும் அதிக இந்திய சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு கொண்டு வருவதே இதன் நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.