அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து
நேற்று (18) கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களில் கைது செய்யப்பட்ட 19 பேரில் 16 பேர் மாத்திரமே இன்றைய தினம் கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே,கல்வெல சிறிதம்ம தேரர் மற்றும் அசந்த ஜயந்த குணதிலக ஆகியோரை தொடர்ந்து தடுப்புக் காவலில் வைக்க பொலிஸார் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இந்த மூவரையும் தொடர்ந்து தடுத்து வைக்க பொலிஸார் தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
போராட்டத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 19 பேரில் 16 பேர் மாத்திரமே தினம் கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்
.நீதிமன்றில் முன்னிலையாக்கப்பட்ட 16 பேருக்கும் தலா 5 இலட்சம் பெறுமதியான சரீர பிணை வழங்கப்பட்டது.