அரசாங்கத்தில் இணைவதாக அண்மைக்காலமாக
பரபரப்பாக பேசப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தற்போது அரசாங்கத்துடன் இணைவதற்கான முயற்சிகளில் இருந்து பின்வாங்கி வருவதாக அறியமுடிகிறது.நிதியமைச்சர் பதவி கிடைக்காதமையே இதற்கான காரணமென அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
அவருக்கு கொள்கை திட்டமிடல் துறை அமைச்சுப் பதவி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, அடுத்த வாரம் இடைக்கால வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், அரசாங்கத்தின் அமைச்சரவையின் ஏனைய அமைச்சர்களை நியமிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.