2021ம் ஆண்டுக்கான கல்விப் பொதுதராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 171,497 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் இந்த எண்ணிக்கை 62.9 வீதமாகும் என்றும் திணைக்களம் கூறுகிறது.
இதேவேளை, 37 பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 12 தனியார் விண்ணப்பதாரர்கள் உட்பட 49 பேரின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.