பொதுமக்கள் முறையாக முகக்கவசங்களை அணியாத
காரணங்களினால் சுவாச நோய்கள் அதிகரித்து காணப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.அத்துடன், இதனால் சிறுவர்களிடையே சுவாசப்பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் கொவிட் – 19 விதிமுறைகளை முறையாக பின்பற்றி சுவாசம் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.