மலேசியாவின் கோலாலம்பூர் அருகே
நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய சில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் கூறுகையில்,
இன்று காலை 8.59 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டர் அளவில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளது .இதன் நீளம் 98.68 ஆகவும்,10 கிலோமீற்றர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் பதிவானது.
முன்னதாக, பெங்குலு-தெற்கு சுமத்ரா மற்றும் லாம்புங் மாகாணங்களுக்கு அருகில், சுமத்ரா தீவின் தென்மேற்கு கடற்கரையில் இரவு 9:30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் உயிரிழப்பு மற்றும் சேதங்கள் குறித்த விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.