தனது இரண்டு கைகளையும் ஒரு காலையும் இழந்த மாணவி ஒருவர் 2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் தோற்றி மூன்று A சித்திகளைப் பெற்று அடைந்துள்ளார் .
ரஷ்மி நிமேஷா குணவர்தன என்ற மாணவியே இந்த சாதனையை படைத்துள்ளார்.
எஹெலியகொட தேசிய பாடசாலையில் கல்வி பயின்ற ரஷ்மி தனது இடது காலால் பரீட்சை வினாத்தாள்களுக்கு பதில் எழுதி இந்த திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
கடினமான சவால்களுக்கு மத்தியில் இந்த வெற்றியை எட்டிய மாணவிக்கு எமது வாழ்த்துக்கள்.
nnewscuts radio · NIMESHA 01
அதேவேளை,
தனது மகளின் உடல் குறைபாடுகள் இருந்தபோதிலும் அனுதாபத்திற்கு மாற்றமாக தனது திறமையால் வாழ்க்கையை வெல்ல மகளுக்கு தொடர்ந்து வழிகாட்டியதாக ரஷ்மியின் தந்தை சரத் குணவர்தன தெரிவித்துள்ளார்.