புடவையையும் நீளமான முடியையும் அணிந்து தன்னைப் பெண் போன்று காட்டிக் கொண்டு திருட்டுக்களில் ஈடுபட்டார் எனக் கூறப்படும் ஆண் ஒருவரை களுத்துறை வடக்கு பொலிஸார் நேற்று (26) கைது செய்துள்ளனர்.
உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ராஜித குருசிங்க தலைமையிலான குழுவினர் சந்தேக நபரை கைது செய்ததுடன், திருடப்பட்ட அரிசி, கேஸ் அடுப்பு , தண்ணீர் மோட்டர், உட்பட பல பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர் பொலிஸாருக்கு வழங்கி வாக்குமூலத்தில், பெண் வேடமிட்டு, வீடுகளுக்குள் பிரவேசிக்கும்போது, அயலவர்களுக்கு சந்தேகம் வராதபடி இருப்பதற்காகவே தான் புடவை அணிந்து கொண்டதாகவும் அதற்காக பயன்படுத்துவதற்கு தன்னிடம் 7 புடவைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்தப் புடவைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
களுத்துறையின் லாகொஸ்வத்த பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய சந்தேக நபரை களுத்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்.