இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், தனது டுவிட்டர் கணக்கைப் போல போலியான டுவிட்டர் கணக்கொன்று இருப்பதாக எச்சரித்துள்ளார்.
தனது அறிக்கைகள் தொடர்பில் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால், உறுதிப்படுத்தப்பட்ட தனது கணக்கில் பார்க்குமாறு குறிப்பிட்டுள்ளார்.
பொய்யான செய்தி மற்றும் டுவிட்டர் பதிவுகள் பிரச்சினைக்குரியது என்றும் தவறாக வழிநடத்த வேண்டாம் என்றும் தனது டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.