அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்வரும் 30ம் திகதி கொழும்பிற்கு மீண்டும் வருகைத் தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என ட்ரூ சிலோன் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி எதிர்வரும் 30ம் திகதி இடைகால வரவு செலவுத்திட்ட உரையை நிகழ்த்தவுள்ளார்.
அன்றைய தினத்தில் கொழும்பிற்கு வருகைத் தந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட ஆர்ப்பாட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளதாக புலனாய்வு பிரிவினர் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பிற்கு வருகைத் தந்த நிலையில், அன்றைய தினம் பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை பிரயோகம் நடத்தி ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்திருந்தனர். (ட்ரூ சிலோன்)