மட்டக்குளி – அலிவத்த பகுதியில் நேற்று (29) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியானார்.
மோட்டார் பைக்கில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவரே பலியானார்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மட்டக்குளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.