கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள்மீது பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படமாட்டாது எனவும் சாதாரண சட்டமே பயன்படுத்தப்படும் என தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.