Our Feeds


Saturday, August 20, 2022

SHAHNI RAMEES

ஒரு மில்லியனை கடந்தது தனிநபர் கடன்தொகை! – மத்திய வங்கி..!

 

இலங்கையில் பிரஜைகள் ஒவ்வொருவரின் தனிநபர் கடன் தொகை தற்போது 1 மில்லியன் ரூபாவை கடந்துள்ளதாக இலங்கை மத்தியவங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

தற்பொழுது இலங்கையின் உள்நாட்டுக் கடனாக சுமார் 12,442.3 பில்லியன்களும், வெளிநாட்டுக்கடனாக 10.867.8 பில்லியன்களும் செலுத்தவேண்டியிருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் ஏப்ரல் 2022ற்குள் அரசு செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை 4 மாதங்களுக்குள் 32 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதன்படி இலங்கையின் ஒவ்வொரு குடிமகனும் 10 இலட்சம் ரூபா கடனாளிகளாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »