Our Feeds


Friday, August 12, 2022

SHAHNI RAMEES

அணுவாயுதங்கள் குறித்த ஆவணங்கள் தொடர்பில் ட்ரம்ப் வீட்டில் தேடுதல் நடத்தப்பட்டது : வொஷிங்டன் போஸ்ட் தெரிவிப்பு

 

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வீட்டில் அணுவாயுதங்கள் தொடர்பான இகசிய ஆவணங்கள் மற்றும் வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்ட ஏனைய ஆவணங்களைத் தேடியே எவ்.பி.ஐ. அதிகாரிகளால் தேடுதல் நடத்தப்பட்டது என செய்தி வெளியாகியுள்ளது.

புளோரிடா மாநிலத்திலுள்ள தனது வீட்டில் எவ்.பி.ஐ. அதிகாரிகள் தேடுதல் நடத்தியதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இத்தேடுதலுக்கு ட்ரம்ப் கடும் கண்டனங்களை வெளியிட்டிருந்தார்.



‘இது எமது தேசத்தின் இருண்ட தருணம், புளோரிடாவின் பாம் பீச்சிலுள்ள எனது அழகிய மர்ர ஏ லாகோ (Mar-a-Lago ) இல்லத்தில் பெரும் எண்ணிக்iயான எவ்.பிஐ. உத்தியேகத்தர்களால் முற்றுகையிடப்பட்டு, சோதனை நடத்தப்படுகிறது.
பாதுகாப்புப் பெட்டகம் ஒன்றையும் அதிகாரிகள் உடைத்து திறந்துள்ளனர்.

அமெரிக்காவின் ஜனாதிபதி ஒருவருக்கு முன்னர் இதுபோன்று நடந்ததில்லை எனவும் தான் மீண்டும் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுவதைத் தடுப்பத்றகாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்

தேசிய சுவடிகள் காப்பக ஆவணங்கள் கையாளல் தொடர்பாகவே இச்சோதனை நடத்தப்படுவதாக ட்ரம்பின் இரண்டாவது மகன் எரிக் ட்ரம்ப் பொக்ஸ் நியூஸ் அலைவரிசைக்கு தெரிவிதிருந்தார்.



இந்நிலையில், அணுவாயுதங்கள் தொடர்பான இகசிய ஆவணங்கள் மற்றும் வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்ட ஏனைய ஆவணங்களைத் தேடியே எவ்.பி.ஐ. அதிகாரிகளால் தேடுதல் நடத்தப்பட்டது என வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

விசாரணையுடன் தொடர்புடையவர்கள் இத்தகவலைத் தெரிவித்ததாக அப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

மேற்படி ஆவணங்கள், அமெரிக்காவின் அணுவாயுதங்கள் தொடர்பானவையா அல்லது வேறொரு நாட்டினுடையது தொடர்பானவையா என்பதை அவர்கள் தெரிவிக்கவில்லை.
இதேவேளை, ட்ரம்பின் வீட்டில் தேடுதல் நடத்துவதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு தானே அனுமதி அளித்ததாக அமெரிக்க சட்டமா அதிபர் மேரிக் கார்லண்ட் தெரழிவித்துள்ளார்.
அத்துடன் தேடுதல் உத்தரவுப்பத்திரத்தின் விபரங்களை வெளியிடுவதற்கு புளோரிடா நீதிமன்றமொன்றில் அமெரிக்க நீதித்துறை திணைக்களம் அனுமதி கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »