Our Feeds


Wednesday, August 24, 2022

Anonymous

அமைதியாக போராடியவர்கள் பயங்கரவாதிகளா? - ஜோசப் ஸ்டாலின் கண்டனம்

 



இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின், வாக்குமூலம் பதிவு செய்வதற்காக நேற்று முகத்துவாரம் காவல்நிலையத்துக்கு அவர் அழைக்கப்பட்டார்.


கடந்த ஜூலை 13ம் திகதி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக கூட்டம் நடத்தியமை மற்றும் அதன்போதான உரை தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் முகத்துவாரம் காவல்நிலையத்துக்கு அழைக்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக அவர் மீதான வழக்கு தொடர்பில் இன்று (24) நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு காவல்துறையினர் அவரை அறிவுறுத்தியுள்ளனர்.

வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்ட ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின், அரசின் அடக்குமுறையை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.

அமைதியாக போராடிய எவ்விதமான பயங்கரவாத செயலையும் புரிய வில்லை. அவ்வாறானவர்களை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்து தடுத்துவைப்பது, ஜனநாயக விரோத செயல் எனக்குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »