Our Feeds


Wednesday, August 24, 2022

Anonymous

தாய்லாந்து நீதிமன்றத்தினால் பிரதமர் பிரயுத் இடைநிறுத்தம்

 



தாய்லாந்தின் பிரதமர் பிரயுத் சான் ஓசா (Prayut Chan-O-Cha )  அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றத்தினால் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். அவரின் பதவிக்காலம் தொடர்பான மனு மீதான தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை அவர் இடைநிறுத்தம் செய்யப்படுவதாக அரசியலமைப்பு அந்நீதிமன்றம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.


2014 ஆம் ஆண்டு புரட்சியையடுத்து பிரதமராக பிராயுத் பதவியேற்றார்.
தாய்லாந்தின் 2017 ஆம் ஆண்டு அரசியலமைப்பின்படி ஒருவர் பிரதமராக 8 வருடங்கள் மாத்திரமே பதவி வகிக்க முடியும்.

இதனால், பிரயுக்தின் 8 வருட பதவிக்காலம் முடிவடைந்து விட்டது என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

ஆனால், 2017 ஆண்டு அரசியலமைப்பு அமுல்படுத்தப்பட்டதிலிருந்து அல்லது 2019 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலிலிருந்தே அவரின் பதவிக்காலம் கணிப்பிட வேண்டும் என 68 வயதான பிரயுக்தின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் பிரதமராக பிரயுத் சான் ஓ சா, பதவி வகிப்பதற்கு எதிராக எதிர்க்கட்சியினால் அரசியலமைப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரிபதற்கு நீதிமன்றம் தீர்மானித்ததையடுத்து, பிரதமராக பிரயுத்தை பதவியிலிருந்து இடைநிறுத்துவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தற்போதைய பிரதிப் பிரதமரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பிரவித் வொங்சுவான் இடைக்கால பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »