(இராஜதுரை ஹஷான்)
தமிழ் - முஸ்லிம் மக்களுக்கிடையில் பகைமையை ஏற்படுத்துவதற்கும் தமிழ் மக்கள் வீதிகளில் இறங்கி போராடும் ஒரு நிலைமையை உருவாக்குவதற்கும் வழிவகுக்கும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு சில இனவாத முஸ்லிம் அரசியல் தலைவர்களின் தூண்டுதலின் அடிப்படையில் செயற்படுகிறாரா என்ற சநதேகம் தோற்றம் பெற்றுள்ளது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் சபையில் தெரிவித்தார்.
அமைச்சின் இணையதளத்தில் மீண்டும் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் உள்வாங்கப்பட வேண்டும். பதிவாளர் நாயகத்தினால் காணிப் பதிவுகளை கல்முனை தெற்கு பிரதேச செயலகத்திடம் ஒப்படைக்குமாறு அனுப்பப்பட்டுள்ள கடிதம் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும்.
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்துக்குரிய கணக்காளர் நியமனம் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லாவிடின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் வீதியில் இறங்குவார்கள் எனவும் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் இன்று (29) திங்கட்கிழமை இடம்பெற்ற மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.