Our Feeds


Tuesday, August 30, 2022

ShortNews Admin

சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் இலங்கைக்கு ஐக்கிய அமெரிக்க அரசு ஆதரவளிக்கும் - அமெரிக்க தூதுவர்



உடன்படிக்கை எட்டப்பட்டால், சர்வதேச நாணய நிதியத்தின்  மூலம் இலங்கைக்கு  ஐக்கிய அமெரிக்க அரசு ஆதரவளிக்கும் என்று இலங்கைக்கான தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.


சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு  நிதியுதவி, விவசாயிகளுக்கான உரம் மற்றும் விதைகள், கல்வி பரிமாற்றம் மற்றும் பொது நிதி நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கான பயிற்சி போன்ற தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான முயற்சிகளை அமெரிக்கா இரட்டிப்பாக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் உள்ள -இலங்கை-அமெரிக்க வர்த்தக சபையில் இடம்பெற்ற நிகழ்வில்  அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

அமெரிக்க-இலங்கை இருதரப்பு வர்த்தகம் மூலம் ஏற்கனவே 180,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஏற்றுமதி  மூலம் இலங்கை பொருளாதாரத்திற்கு பில்லியன்களை பங்களிக்கின்றனர்  என்று அவர் கூறியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »