Our Feeds


Monday, August 22, 2022

SHAHNI RAMEES

அரச சட்டவாதிகள் சமுகமளிக்காமையால் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு!


அடிப்படைவாதப் போதனைகளை செய்ததாக

சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, புத்தளம் அல்-சுஹைரியா அரபுக்கல்லூரியின் அதிபர் ஷகீல் கான் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தொடர்ந்துள்ள வழக்கு இன்று (22) திறந்த நீதிமன்றில் விசாரணைக்கு வரவில்லை.


இந்த வழக்கில் அரச தரப்பின் சார்பில் ஆஜராகும் சட்டவாதிகளுக்கு சமூகமளிக்க முடியாத நிலை காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் வழக்கு விசாரணைக்கு வரவில்லை.


எவ்வாறாயினும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த உத்தரவின் பிரகாரம் வழக்கானது நாளை (23) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என புத்தளம் மேல் நீதிமன்றம் வழக்கின் தரப்பினருக்கு அறிவித்துள்ளது.




இந்த விவகாரம் குறித்த வழக்கானது புத்தளம் மேல்நீதிமன்ற நீதிபதி நதி அபர்ணா சுவந்துருகொட முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென கடந்த ஜுன் 10 ஆம் திகதி விசாரணையின் பின்னர் அறிவிக்கப்பட்டது.


இதன்போது வழக்குத்தொடுனர் தரப்பின் ஏனைய சாட்சியாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்களென நீதிமன்றம் அறிவித்திருந்தது. அவ்வாறான நிலையில் சில சாட்சியாளர்களுக்கும் நீதிமன்றில் ஆஜராக அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. எனினும் வழக்கில் ஆஜராகும் அரச தரப்பின் சட்டவாதிகளுக்கு இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராக முடியாதநிலை காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.


எனினும் இன்று திட்டமிட்டபடி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.


இந்த வழக்கில் அரச சார்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சுதர்ஷன டி சில்வா, பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் லக்மினி ஹிரிஹாகம ஆகியோர் ஆஜராகி சாட்சி நெறிப்படுத்தலை முன்னெடுக்கின்றனர். பிரதிவாதிகள் இருவர் சார்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்ததிஸ்ஸ தலைமையிலான குழுவும் சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள தலைமையிலான குழுவும் ஆஜராகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »